Wednesday, October 15, 2014

மகாராஷ்ட்ரா மற்றும் அரியான தேர்தல் முடிவுகள் குறித்து எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. மோடி வெற்றி மிக்க மகிழ்வை தந்தாலும் ஊழலுக்கும் கறுப்பு பணத்துக்கும் எதிரான அந்த அரசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரவில்லை.ஆக மகாராஷ்ட்ரா மற்றும் அரியான தேர்தல்களில் ப ஜ க வெற்றி பெற்றாலும் பெரிதாக மாறுதல் எதுவும் வந்துவிடாது.

சி பி ஐ டைரக்டர் இந்த நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைகற்றை ஊழல் வழக்கு மற்றும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு ஆகியவற்றில் சிக்கிய குற்றவாளிகளை தன் வீட்டில் சந்திக்கிறார். இந்த விவகாரம் -கடுமையான குற்றசாட்டு உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் நம்பகத்தன்மையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இருக்கவேண்டும். இந்த குற்றசாட்டு உண்மை என கண்டறியப்பட்டு இருந்தால் சி பி ஐ டைரக்டர் மீது உச்சநீதிமன்றம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். ஆனால் உச்சநீதிமன்றம் அப்படி செய்யாமல் பூஷனிடம் இந்த தகவலை சொன்னது யார் என்று முட்டாள்த் தனமான கேள்வியை கேட்டு பிரசினையின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது.
சி பி ஐ டைரக்டர் மீதான கடுமையான ஆதாரபூர்வமான குற்றசாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுத்து வரும் வழ வழா கொழ கொழா வாழைப்பழ நடவடிக்கைகள் நாடு பூராவும் ஊழலுக்கு எதிராகவும் கறுப்பு பணத்துக்கு எதிராகவும் போராடும் எண்ணற்றோர் மத்தியில் பீதியை கிளப்பி விட்டது. ஊழல் மற்றும் கறுப்பு பணம் குறித்து ரக்சிய தகவல் தருவோரின் பெயரகள் வெளியிடப்பட்டால் என்ன ஆகும்? உச்ச நிதிமன்றத்தின் நடவடிக்கைகள் ரொம்ப ரொம்ப கேவலமாக இருக்கிறது.
மத்திய ப ஜ க அரசு இந்த ஊழல் பெருச்சாளி சி பி ஐ டைரக்டரை உடனடியாக பணி நீக்கம் செய்து இருக்கவேண்டும். குற்றவாளிகளை வீட்டில் சந்தித்த அவர் மீது குற்றவாளிகளோடு சேர்த்து புதிய வழக்கு ஒன்றினை தாக்கல் செய்து அதிரடி விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டு வந்து இருக்கவேண்டும். ப ஜ க அரசு மூச்சு விடவில்லை. இதில் இருந்தே இந்த இமாலய ஊழல்களின் முடிவை மக்கள் புரிந்துகொள்ளலாம்.
ஊழலை ஒழிப்பதில் நாங்கள் ரொம்ப சீரியஸாக இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ள கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ப ஜ க அரசு தவற விட்டு விட்டது. இதை செய்யாமல் தூய்மையான இந்தியா என்று துடப்பமும் கையுமா மோடி போஸ் கொடுப்பதும் இந்த திட்டத்துக்கு துணையா மகாத்மா காந்தியை அழைப்பதும் மாபெரும் மோசடி வேலை.
மத்தியில் ப ஜ க அரசு இந்த லட்சணத்தில் இருக்கையில் மகாராஷ்ட்ராவில் அரியானவில் யார் ஜெயித்தால் என்ன? ஒரு மாறுதலும் வரப்போவதில்லை.

No comments: